TSR நிறுவனம்T.S.ராமசாமி அவர்களால் 1950இல் விவசாய பொருட்கள் விற்பனை நிலையமாக முத்தூர், திருப்பூர் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. படிப்படியாக வளரச்சிபெற்று விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யும் வணிக நிறுவனமாக தரம் உயர்ந்தது. 1960 ஆம் ஆண்டு முதல் மொத்த வியாபார நிறுவனமாக விரிவாக்கப்பட்டு கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நிறுவனமாக வளர்ந்தது. 1980 ஆண்டில் இரண்டு அரிசி ஆலைகளை நிறுவி அரிசி தயாரிப்பில் முழுமையாக கால் பதித்தது.

நேர்த்தியான தயாரிப்பு முறை மற்றும் தரம் காரணமாக பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களை பெற்று வெற்றிகரமாக பயணித்துக்கொண்டுள்ளது. பொன்னி,ராஜபோகம், IR-20, சீரக சம்பா, எமெர்ஜென்சி, இட்லி அரிசி மற்றும் பாசுமதி என பல்வேறு வகையான அரிசி வகைகளை தரம் மற்றும் தனி சுவையுடன் வழங்கி வருகிறது.

 

எங்களை பற்றி

TSR அரிசி ஆலை T.S.ராமசாமி அவர்களால் 1950இல் விவசாய பொருட்கள் விற்பனை நிலையமாக முத்தூர், திருப்பூர் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. படிப்படியாக வளரச்சிபெற்று விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யும் வணிக நிறுவனமாக தரம் உயர்ந்தது. 1960 ஆம் ஆண்டு முதல் மொத்த வியாபார நிறுவனமாக விரிவாக்கப்பட்டு கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நிறுவனமாக வளர்ந்தது.

நிலக்கடலை பராமரிப்பு ஆலை மற்றும் கிடங்கு 1978 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு விவசாயிகள் மற்றும் வணிகர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு எண்ணெய் நிறுவங்களுக்கும் விற்பனை செய்தது. மேலும், விதைக்கான நேரடி விற்பனை மையமாகவும் தனது சேவையை விரிவுபடுத்தியது.

1980 ஆண்டு தொடக்கத்தில் குட்டப்பாளையம் பகுதியில் ஆலை குத்தகைக்கு எடுக்கப்பட்டு தனது சொந்த பெயரில் அரிசி தயாரிப்புகளை வழங்க ஆரம்பித்தது. மேலும், அதே ஆண்டு தனது புதிய அரிசி ஆலையை மேட்டான்காட்டு வலசு, முத்தூர் பகுதியில் நிறுவி தனது அரிசி விற்பனை சேவையை விரிவு படுத்தியது. தொடர்ந்து விவசாய பொருட்கள் வணிகத்தையும் வெற்றிகரமாக நடத்தியது.

நிலக்கடலை விவசாய பகுதியில் பயிரிடும் அளவீடு கடும் வீழ்ச்சி மற்றும் பருப்பு வரத்து குறைந்ததால் காரணமாக நிலக்கடலை ஆலை நிறுத்தப்பட்டது.அதன் பிறகு முழுமையாக அரிசி உற்பத்தியில் இறங்கி தனக்கென தனி முத்திரை பதித்தது. தரம் மற்றும் விற்பனை நிலைப்பாட்டின் காரமாக விரைவாக மக்களிடம் நன்மதிப்பை பெற்றது. 1990 ஆம் ஆண்டு அரிசி ஆலை நவீன மயப்படுத்தப்பட்டு பொன்னி, எமெர்ஜெண்சி, இரு-20, ராஜபோகம், சீராக சம்பா, இட்லி அரிசி என பல்வேறு வகையான அரிசி வகைகளை வழங்கி வருகிறது இன்றுவரை ஆயிரக்கான வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கி வருகிறது.

IR-20 அரிசி வகை:
உணவு தேவையை பூர்த்தி செய்ய அரசால் அறிமுகப் படுத்தப்பட்ட IR-20 அரிசி வகை, தட்ப வெட்ப தாங்கும் திறம் மற்றும் அதன் சிறப்பான குணங்கள் காரணமாக அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. TSR நிறுவனம் தேர்ந்தெடுக்க பட்ட பகுதிகளில் இருந்து IR-20 அரிசி வகையை கொள்முதல் செய்து பாரம்பரியமான முறையில் தயாரித்து விற்பனை செய்வதால் IR-20 வகை மக்களிடையே தனி புகழ் பெற்றது. 1980 முதல் இன்று வரை எங்களது IR-20வகை அரிசிக்கு சிறந்த ஆதரவு மக்களிடையே கிடைத்து வருகிறது.

எண்ணெய் உற்பத்தி:
தேங்காய் எண்ணெய் உற்பத்தியில் 2012 ஆம் ஆண்டு கால்பதித்து சிறப்பாக இயங்கி வருகிறது. நவீன தேங்காய் எண்ணெய் ஆலை அமைக்கப்பட்டு சுத்தமான கலப்படமில்லாத தேங்காய் எண்ணெய் ஏற்றுமதியும் செய்து வருகிறது.

எங்கள் நிறுவனத்தின் நன் மதிப்பு மற்றும் வாடிக்கையாளர்களின் கருத்துக்களை நேரடியாக தெரிந்துகொள்ள வாடிக்கையாளர் குரல் பக்கத்திற்கு செல்லவும். எங்களது இதர அரிசி பிராண்டுகள் பற்றி அறிய தயாரிப்புகள் பக்கத்திற்கு செல்லவும்

எங்கள் தயாரிப்புகள்